புதன், 25 மே, 2011


ஒரு துரோக நாடக அரங்கேற்றம்

by புதினம் புதினம் on Wednesday, May 25, 2011 at 2:16pm

2009மேயில் எமது ஆயுதபோராட்டம் மௌனிததாக எமது தலைவர் அறிவித்து புலம்பெயர் தமிழரிடையே விடுதலை போராட்டத்தை கையளித்தது முதல் இன்று வரை எதிரியானவன் எத்தனையோ வழிகளில் புலம்பெயர் தமிழரிடையே எஞ்சி நிற்கும் சக்தியை அழிக்க கங்கணம் கட்டி செயல்படுகின்றான்.இதற்கென பல சாதுரியமான முறைகளை பின்பற்றி ஓரளவு வெற்றியும் கண்டு வருகின்றான் .புலம்பெயர் தமிழரிடையே பலம் பெற்று நிற்கும் இந்த விடுதலை தீயை முற்றாக அழித்தொழிக்க சகல தந்திரோபயங்களையும் கையாண்டு வருகிறான். முக்கியமாக இரண்டு வழிகளை தேர்ந்தெடுத்து உள்ளான்.1. தாயகத்திலிருந்து சரணடைந்த போராளிகள் ,இளைஞர்களை மூளைசலவை செய்தோ அன்றி அவரது குடும்ப உறவுகளை பணயமாக வைத்தோ தலைநகர் வழியே ரகசியமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி புலம்பெயர் தேசங்களில் வெளிப்பார்வைக்கு அவர்களை தேசிய பற்றாளர்களாக நடமாட விட்டு தனது காரியத்தை நிறைவேற்றுகிறான்.இவர்களோடு இப்போதும் அரசோடு ஒட்டி உறவாடி துரோகிகளாக இருக்கும் இயக்க உறுப்பினர்களையும் கலந்து அனுப்பி வெற்றி காண்கிறான்.2. புலம்பெயர் நாடுகளில் நீண்ட காலமாக வசிக்கும் ஒரு சிலரை அவர்களுக்கே தெரியாமலோ தெரிந்தோ அணுகி தாயகம் வரவைத்து அங்கே பாரிய தொழில் நிறுவனங்கள் விடுதிகள் பண்ணைகள் மாளிகைகள் என்பவற்றை உருவாக்கி உங்கள் வளத்தை மென்மேலும் பெருக்க உதவுகிறோம் என்று ஆசை வார்த்தைகள் சொல்லி அவற்றில் முதலீடு செய்ய வைக்கிறான். இன்னும் சிலரை உங்கள் ஊருக்கு சேவை செய்யலாமே என்று கூறி சமூக அமைப்புகள் பாடசாலைகள் ஆலயங்கள் என விரல் காட்டி வைக்கிறான்.அப்படியான எண்ணத்தோடு வருவோருக்கு வன்னி யாழ் மாவட்ட பகுதிகளில் வெளிநாட்டு வாசிகளின் சொத்துகள, போராளிகள் சம்பந்தபட்ட சொத்துகள் , இன்னும் பொது அரச சொத்துக்களை கைமாறாக வழங்கி தனது திட்டத்தை சிறப்பாக முடித்து விடுகிறான்.இதை விட கேவலமான விஷயம் என்னவென்றால் இந்த வழியில் முன்வருவோர் அரை மனதுடன் காணப்படுமிடத்து கொழும்பில் வைத்து நட்சத்திர விடுதிகளில் மது மாது உணவு டிஸ்கோ போன்ற உல்லாச வாழ்க்கையில் திளைக்க விட்டு மாற்றி விடுகின்றான்.இத்தனைக்கும் இவர்களுக்கு உறுதுணையாக துரோக இயக்கங்கள் செயல்படுகின்றன.

இவற்றில் ஈ.பீ.டி.பீ அமைப்பு தீவுப்பகுதியில் காலூன்ற வேண்டும் வாக்கு வங்கியை பெருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த துரோகத்தனத்தை கனகச்சிதமாக பயன் படுத்துகிறது. அண்மைக்காலமாக இப்பகுதி பாடசாலைகள் சமூக சேவை நிறுவனங்கள் கோவில்களை இது போன்ற வெளிநாடில் வசிக்கும் விலைபோகும் புலம்பெயர் நபர்களிடம் பேசி அங்கே வாழும் மக்களிடம் மறைமுகமாக நிதி சேர்த்து செய்விப்பதொடு முடிவில் அந்த நிகழ்வுகள் விழாக்களுக்கு இந்த ஈ பீ டி பீ அமைப்பின் அமைச்சர், பா. உறுப்பினர் முன்னின்று திறந்து வைக்கிறார்கள் .இதற்கு பிரதிபலனாக வன்னியின் துணுக்காய் முல்லைத்தீவு முழங்காவில் கிளிநொச்சி பகுதிகளில் காணிகளும் பண்ணைக்களுமாக வழங்கபடுகிறது.இந்த தகவல்கள் செய்திகள் எத்தனையோ ஊடகங்களில் வெளிவந்திருப்பது நீங்கள் அறிந்ததே. ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்த நபர்கள் உங்கள் ஊருக்கு சேவை செய்யவது போல இருக்கும்.எமது தீவுப்பகுதி பாரம்பரியமாக அரசியலில் சோடை போகாத வரலாற்றை கொண்டது.தமிழரசு கட்சி கூட்டணி விடுதலைப்புலிகள் என்ற வரிசையில் ஆதரவு தந்து பெருமை சேர்த்த இந்த பூமி துரோகிகளுக்கு விலைபோகும் ஊர் என்று மற்றவன் பார்த்து பழி சொல்லும் அளவுக்கு மாறியுள்ளதை நீங்க எண்ணி பாருங்கள்.இந்த ஒரு சில விலைபோகும் சுயநல வாதிகளினால் எமது சொந்த மண் மாற வேண்டுமா.?

 புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலயம் மடத்துவெளி,ஊரதீவு,வல்லன் கிராம மக்களின் கல்வித்தாய் .இந்த பாடசாலை ஆரம்பத்தில் சைவ வித்தியா விருத்தி சங்கத்தினாலும் பின்னர் வாணர் சகோதர்களின் சேவையாலும் எழுச்சி கண்டதாகும்.பின் வந்த காலங்களில் ஆசிரியர்களான ஐயாத்துரை ,சொக்கலிங்கம் ,தியாகராசா, குலசேகரம்பிள்ளை போன்றோராலும் ஊர் பெரியோர் கூடிய பெற்றோர் ஆசிரியர்சங்கதாலும் திறம்பட நிர்வகித்து உயர்வடைந்தது.பின்னர் மகேஸ்வரன் , இராசரட்னம், இராமச்சந்திரன் ,இராசமாணிக்கம் ,விநாயகமூர்த்தி .சீவரட்ணம் போன்றோர் முயற்சியினால் பழைய மாணவர் சங்கத்தின் வழிநடத்தல் கொண்டது.அறுபதுகளின் இறுதியில் மடத்துவெளியின் மறுமலர்ச்சி என்று போற்றப்படும் காலத்தில் அ.சண்முகநாதனின் (கண்ணாடி) வழிகாட்டலில் பழைய மாணவர்சங்கம் ,மடத்துவெளி சனசமூக நிலையம் ,பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் சேவையில் உயர்தர பாடசாலையானது.இப்போதுள்ள அபிவிருத்தி நிலை அது தான்..நாட்டில் உண்டான யுத்த சூழ்நிலையால் பெரும்பாலான மக்கள் இடம்பெயர அல்லது புலம்பெயர பாடசாலை சிறிது காலம் இயங்காமலும் இருந்தது .பின்னர் வந்த ஆசிரியர்களில் சிலரும் சில அதிபர்கள் அல்லது உப அதிபர்களும் தமது சுயநலனுக்காக பதவி உயர்வுக்காக இந்த துரோக குழுக்களுக்கு புகழ் பாடி தமது சொந்தக் காரியங்களை சாதித்தனர் .இதற்கு நன்றிக்கடனாக இந்த துரோகக் குழுக்களின் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,கட்சி தலைவர்கள் ,பிரதேசத் தலைவர்கள் என அழைத்து குலாவி மகிழ்ந்தனர்.எமது அரசியல் தூய்மையான மண்ணை காட்டி கொடுத்தனர்.எண்கள் முன்னோடிகள் கண்ணாடி,எஸ் கே மகேந்திரன் போன்றோரின் பாசறையில் ரத்தம் சிந்தி தொண்டு புரிந்து தமிழ் உணர்வும் இன் விடுதலை வீரமும் பய்திருந்த மண் அது. உதாரணமாக கடந்த வருட விளையாட்டு விழாவுக்கு அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவையும் இந்த வருட விளையாட்டு விழாவுக்குm(மார்ச் 2011 )இராசமாணிக்கம் குடும்பத்தினால் அமைத்துகொடுக்கப்பட்ட நுழைவாயில் திறப்புக்கும் அவரது சகா சந்திரகுமார் பா.உ.ஐயும் அழைத்து காவடி எடுத்தனர்.இரண்டு மாதத்திலேயே மீண்டும் பவளவிழா என்று அமைச்சர் டக்லஸ் அவர்களையே அழைத்து கால் கழுவினர்.இங்கே மக்களிடையே குழப்பம் எழுந்துள்ளது.ஆக இந்த மூன்று நிகழ்வை செய்தும் கூடஇவர்கள் இந்த பாடசாலைக்கு ஒரு துரும்பை கூட எடுத்து வைக்கவில்லை.எந்த ஒரு உதவியும் செய்யவில்லை.இப்போது மட்டுமில்லை. 1985முதல் இப்பாடசாலைக்கு இவர்கள் என்ன செய்தார்கள். 1991முதல் இவர்களின் கட்டுபாட்டில் தானே இருந்தது . நடந்தது என்ன ? இந்த வருடம் ஊரதீவு மேற்ற்க்கு பகுதியில் அய்யானர் கோவிலுக்கு அருகில் ஊரதீவு திருநாவுக்கரசு வித்தியாசாலையில் மட்டுமே கல்வி கற்றதிரு. B என்பவர் மற்றும்1970 வரை கமலாம்பிகையில் மட்டுமே(எழுபதாம் ஆண்டில் இங்கே ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது குறிபிடத்தக்கது ) கல்வி கற்றவர் திரு. S என்பவரும் இப்பாடசாலைக்கு எதாவது செய்யபோவதாக சாமத்திய ,கல்யாண, பிறந்தநாள் வீடுகளில் சொல்லி மக்களிடம் காசை சேர்த்தனர்.யாரையாவது கூப்பிட்டு கூடிப்பேசி திட்டம் போட்டு செய்யாது தாமே எல்லாமுமாகி ஒரு வெள்ளை காகிதத்தில் எதுவுமே எழுதாது (எழுதத் தெரியாதோ என்னவோ) காசு தொகையையும் பெயரையும் எழுதி நான்காக மடித்து காற்சட்டைக்குள் வைத்துகொண்டனர். இனி விசயத்துக்கு வருகின்றோம். இந்த திரு Bஎன்பவரின் சகோதரர்திரு V இங்கே ஈ பீ டி பீ இன் அமைப்பாளராக செயல்படுகிறார்.கடைசியாக டக்ளஸ் இங்கே வந்த பொது சூரிச் சென்று அவரை சந்தித்து அவரது திட்டத்தை கேட்டு வந்தவர். சில மாதங்களில் அவரின் அழைப்பை ஏற்று தாயகம் சென்று டக்ளசை கண்டு களிகொண்டு உறவாடி அப்படியே புங்குடுதீவு போனார்.அங்கே பாடசாலை அதிபரை சந்தித்து டக்ளஸ் ஐயா சொல்லிவிட்டவர்,உடனே ஒரு பழையமாணவர் சங்கத்தினை ஆரம்பிக்க போகிறேன்.என்று கூறிதனது குடும்ப உறவினர் சிலரை அழைத்து நிர்வாகம் தெரிந்து விட்டு வந்தார். ஏற்கனவே தீவுப்பகுதிஈ பீ டி பீ பொறுப்பாளராக இருந்த மடத்துவெளியில் கடை வைத்திருந்த துரை என்பவரின் இரண்டாவது மகன் மோகன் என்பவரின் தம்பி து.சுவேந்திரா என்பவரையும் சுவிஸ் திரு B என்பவரின் மனைவியின் தம்பிகோணேஸ்வரன் ( சிவா )என்பவரையும் வசதியாக தெரிந்திருந்தார்.

 இனி டக்ளச்சின் எண்ணப்படி மக்களிடம் காசு சேர்ப்பது .இதற்காக சகோதரர்திரு. Bஎன்பவரையும் மைத்துனர் திரு S என்பவரையும் இணைத்து விட்டார்.நிறையகாசும் சேர்ந்து விட்டது.இப்போது தங்கள் திட்டப்படி இந்த மூவருமே புங்குடுதீவு போய் அங்கே டக்ளசைமற்றும் அவரது கட்சியின் எல்லாவிதமான பிரதேச பகுதி தலைவர்களையும் அழைத்து முருகன் கோவிலுக்கு கொண்டு போய் காலை நன்றாக நக்கி மாலை போட்டு அழைத்து வந்தார்கள் .அவர்(திரு B )படிப்புக்கு தக்கதாக கோட், ரை கட்டுவது தான் வழக்கம் அப்படியே தான் அங்கும் போய் பாடசாலை வாசலில் நின்று படமும் எடுத்து காத்திருந்தார்.டக்ளஸ் மாமா வந்ததும் யாரடா அது கோட் ,, ரை ,, கட்டி வந்துருப்பது என்று கேக்க(டக்லஸ் மாமாமவே வேட்டி தான் கட்டுவார்-கோவம் வராதா அவருக்கும் )துண்டை காணன் துணியை காணன் எண்டு ஓடி போய் கழட்டி எறிஞ்சுட்டு வேட்டியோட வந்தார்களாம்.விழாவில் யாரோ புண்ணியவான் நம்பி கொடுத்த காசில சைக்கிள் வாங்கி ஊரதீவில் உள்ள சொந்தகாரளுக்கு தான் கொடுத்தவராம் . அதை கூட தான் வாங்கி கொடுப்பது போல பல்லைக் காட்டிக் கொண்டு போடோவுக்கு நின்றாராம் .பாவிகள் செய்தியில் தான் டக்லஸ் ஐயா தான் சைக்கிள் அன்பளிப்பு செய்து கொடுத்தது போல போட்டு விட்டார்கள் . சுவிசில சைக்கிளுக்கு காசு கொடுத்தவன் பாவம். எல்லாம் செய்தும் டக்ளஸ் ஐயாவுக்கு பின்னால் இருத்திப் போட்டார்கள் .போடோவில தெரியவி ல்லை எண்டு அங்காலும் இங்காலும் எட்டி எட்டி இரண்டு பேரும் சிரிச்சவை தான் எங்க அது பெரிசா தெரியவி ல்லையாம்.
 டக்ளசுக்கு பக்கத்தில நிண்டம் அவரோட நிறைய கதைச்சனாங்க .நல்ல மனிசன்.நிறைய செய்ய போறாராம்.உறுதி அளித்தவராம்.போனவைக்கு செய்திருப்பர் . எங்கே காணிகளும் கடைகளும் கொடுத்தாரோ இனி தானே தெரிய வரும்.ஏதாவது செய்கிறார்கள் உங்களுகென்ன எண்டு கேகுறீங்களா சரி இப்போ உங்களோட கேக்கிறேன் கொஞ்ச கேள்விகள் பதில் சொல்லுங்கோ .எங்க பக்கம் நியாயம் இருந்த இனிமேலாவது இப்படி செயுங்கள். உதவி செய்யுங்கோ நேரடியாக அதிபரின் பெயருக்கு அல்லது சதீபன் என்பவரின் பெயருக்கு நீங்களே காசை அனுப்புங்கள். உண்டியலில அல்லது வங்கி மூலமாக அனுப்பலாமே என் இந்த மூன்றாம் பேர்வழி

 கேள்விகள்
 1.இந்த இருவரும் சுவிஸ் மக்களிடம் பவள விழா செய்ய போகிறோம் டக்ளசை அழைக்க போகிறோம் .நாங்களும் ஊருக்கு போய் டக்ளஸ் காலை நக்க இருக்கிறோம் என்று சொல்லி காசு சேர்த்தார்களா இல்லையே அப்படி கேட்டால் மக்கள் செருப்பால் தானே அடிதிருப்பான்கள்.
 2.டக்ளசை அழைத்த காரணம் பாடசாலைக்கு ஏதும் உதவுவார் என்று சொல்கிறீர்களே . அப்படியானால் மூன்று தடவை அழைத்து விட்டீர்களே எதாவது ஒரு துரும்பையாவது எடுத்து போட்டுள்ளாரா . 1985முதல் இந்த பாடசாலைக்கு ஏதும் செய்திருக்கலாமே . 1991முதல் இவர்களின் கட்டுப்பாட்டில் தானே இந்த பகுதி இருந்தது என்ன செய்து கிழித்தார்கள் .சண்டை முடிந்து புலம்பெயர் மக்கள் தொடர்பு கொண்ட பி றகு அவர்கள் காசை கண்டு இந்த ஞானோதயம் பிறந்தது
 3 .துரைராசா சுவேந்திரராசா எந்த வகையில் விசா எடுத்துஒரு விமான டிக்கட்டுடன் நேரடியாக லண்டன் வந்து சுவிஸ் வந்தார் . 35லட்சம் ரூபா கொடுத்தாலும் வெளி நாடு வர தவம் கிடகிறார்களே. இவருக்கு மட்டும் எப்படி இந்த சலுகை கிடைத்தது இந்த வேளையிலே நாம் முதல் எழுதிய அரசின் தந்திரோபாய முறை பற்றி மீண்டும் வாசியுங்கள் புரியும் .மகிந்தவினால் அனுப்பப்பட்ட தூதுவர்கள் இவர்கள்

4 .நீங்களாகவே கடிததலைப்பில் போட்டுக்கொண்ட உங்கள் நிர்வாகத்தில்
 சதீபன் ,.நிமலன் பாபு ,சண்முகம்,, சுவேந்திரராசா கோணேஸ்வரன் (சிவா) என்று ஊரதீவு மக்களாகவே இருக்கிறார்களே .புங்குடுதீவிலேயே கல்வியில் பெயர் போன மாணவர்களை உருவாக்கிய மடத்துவெளி வல்லன் பகுதிகளில் மக்கள் கிடைக்காமல் போய் விட்டார்களா ?.நீங்களும் உங்கள் உறவினர்களுமாக சேர்ந்து கொண்டீர்களா?.சுவிசில் மட்டும் இந்த பாடசாலையில் கல்வி கற்ற க.பொ.தா.உ.தரம் வரை அல்லது மேலே படித்த 112 மாணவர்கள் இருக்கிறார்களே உங்களுக்கு கண்ணில் படவில்லையா ?அதென்ன நீங்கள் உங்கள் மைத்துனர்களாக சேர்ந்து கொண்டது.
 5 . இந்த கொடுமை கண்டு மக்கள் குழப்பத்தில் இருப்பதை கேள்விப்பட்டு இப்போது கூட்டம் கூட போவதாக கொக்கரிக்கிறீர்களே? டக்ளசின் காலை நக்கியது நக்கியது தானே இனி திரும்ப ஊத்தையாக்க முடியுமா ?தயவு செய்து கக்கூசுக்கு போனதன் பின்னர் கழுவுங்கள் .கழுவியபின் கக்கூசுக்கு போவதல்ல முறை.

6.இப்போதைய நிலைமையில டக்ளஸ் போன்றோரை அழைக்காமல் செய்ய முடியாதே என்று வேறு கூறுகிறீர்கள் .ஏன் ஐயா கடந்த வருடம் கணேச வித்தியாசாலையில் நூற்றாண்டு விழா இந்த துரோக கூட்டம் இல்லாமல் சிறப்பாக நடைபெறவில்லையா ?
 7 .நீங்கள் செய்த அத்தனைக்கும் முன்னரே திட்டம் போட்டு செய்துள்ளீர்களே ஏன் மக்களிடம் காசு சேர்க்கும் போது இதனை மறைத்து விட்டீர்கள் எல்லாம் முடிய விட்டு ஊருக்கு போகும் முதல் 3-4 நாட்களுக்கு முன்னர் தான் ஊருக்கு போவதாக மட்டும் சொன்னீர்களே ?அப்போது கூட டக்ளஸ் ஐ அழைப்பதாக சொல்லாது மறைத்து விட்டீர்கள்.ஏன் ?
 8 . எல்லாம் முடிந்த பின்னர் இணையதளங்களில் உங்கள் செய்தி படங்கள் வந்த பின்னர் தானே மக்களால் கூட அறிய முடிந்தது .ஏன் நீங்கள் பல்லை இளித்துக் கொண்டு டக்ளஸ் மாமாவின் அரவணைப்பில் சுகம் காணும் போது தெரியவில்லையா .ஈ பீ தீ பீ தோழர்கள் உங்கள் செயலை தங்கள் பிரசாரத்துக்காக பயன் படுத்தி இணையத்தில் வெளியிடுவார்கள் என்று , சரி அப்புறம் ஏன் இணையதளங்கள் மேல் கோவம் கொண்டு திட்டி திரிகிறீர்கள் ஒன்றும் பொய்யை போடவில்லையே .ஆதாரத்தோடு படங்களோடு இணைய பெயர்களோடு தானே பிரசுரிதிருந்தார்களே.அவர்கள் மேல் தப்பிலையே .ஏன் உங்கள் செய்தி படம் வருவதை விரும்புகிறீர்கள் இல்லை இப்போதாவது புரிகிறது போலும் செய்தது தப்பு என்று மக்களிடம் தலை காட்ட முடியாமல் போகும் என்று உணருவீர்களே .
 மக்களே உதவி செய்யுங்கள் .ஆனால் இவர்கள் மூலம் அல்ல நேரடியாக உண்டியல் அல்லது வங்கி மூலம் அதிபருக்கு அல்லது சதீபனுக்கு அல்லது அங்கெ உள்ள உங்கள் உறவுகள் மூலம் உதவி செய்யுங்கள் .இவர்களது வங்கி தொலைபேசி விபரங்கள் எமது ஊரின் பல இணையங்களில் அல்லது கமலாம்பிகை பேஷ் புக் இல் உள்ளது.இனியாவது சிந்தித்து செயல் படுங்கள் இவற்றை வெளிச்சம போட்டு காட்டும் ஊடகங்கள் மேல் ஏன் கோவம் கொள்ள வேண்டும் இந்த துரோகிகள் மீது கோவத்தை காட்டுங்கள் .
 பாடசாலை தொலைபேசி இலக்கம் 0213209522
 பாடசாலை வங்கி இலக்கம் coomercial bank jaffna AC No 806007825
 செயலாளர் சதீபன் தொ.பே.இல. 0776589678

(THANKS--FACEBOOK--PUTHINAM)

சனி, 14 மே, 2011

மடத்துவெளி ஊரதீவு வல்லன் மக்களே
எமது கல்வித்தாய் கமலாம்பிகை வித்தியாலயம் எத்தனையோ கஷ்டத்தின் மத்தியில் கட்டி எழுப்பப்ப பட்டு தற்போதைய உச்ச கட்ட நிலையை எட்டியதும் அதற்காக எமது இளைஞர்கள் பெரிய்யோர்கள் ஆசிரியர்கள் கடுமையாக உழைத்ததும் நீங்கள் அறிந்ததே . இப்போதைய அரசியல் நாட்டு சூழ்நிலையை பயன்படுத்தி சில  புல்லுருவிகள் (அதிபர் ,நிர்வாகத்தில்  சிலர் என ) எல்லாமே தாங்கல் தான் என்ற ரீதியில் பழைய வரலாறுகளை மறந்து அவர்களை கண்டு கொள்ளது டக்லஸ் போன்ற துரோகிகளின் வாக்கு வங்கியை பலப்படுத்தாவென செல்வாக்கை பெருக்கவென மக்களிடையே அவர்கள் தன எல்லாம்  செய்கிறார்களோ  என்ற மாயையை உண்டு பண்ண அவர்களிடம் எதோ  லஞ்சமாக பண்ணைகளை வன்னி காணிகளை வாங்கி கொண்டு கிளம்பி இருக்கிறார்கள் .முக்கியமாக சுவிசில் இருந்து பாபு சண்முகம் போன்றோரும் பாடசாலைக்கு எதோ செய  போகிறோம் என காசு சேர்த்து கொண்டு போயி டக்லஸ் கையில் கொடுத்து அவரை அவர் கட்சிகாரரை கூப்பிட்டு விழ எடுத்து காலை கழுவி போட்டோ எடுத்து செய்திகளில் போட்டு விலாசம் கட்டுகிறார்கள்.கேட்டால் இந்த நிலையில அவர்களை தன கூபிடியா வேணுமாம் .என் கணேச வித்தியாசாலை விழ எடுக்கவில்லைய டக்லஸ் இல்லாமல் . தூய்மையான அரசியலுக்கு பெயர் போன இந்தமண்   கண்ணாடியும் எஸ் கே மகேந்திரனும் வழிகாட்டிய இந்த மண்ணில்ல இப்படி எள்ளல நடக்கிறது என்னே கொடுமை துரோகிகள் ஒழியட்டும்